SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி ஓராண்டு நிறைவு

2022-08-16@ 00:56:03

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி தலிபான்கள் துப்பாக்கி ஏந்தியும், வெள்ளை நிற பதாகை ஏந்தியும் ஒரு ஆண்டு நிறைவு பேரணி நடத்தினார்கள். தலைநகர் காபூலின் தெருக்களில் நடைபயணம், சைக்கிள்கள் மற்றும் பைக் வெற்றி அணிவகுப்புக்களை நடத்தினார்கள். அமெரிக்க தூதரகம் முன் இஸ்லாம் வாழ்க என்று கோஷமிட்டனர். மேலும் அமெரிக்காவிற்கு மரணம் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். முதலாம் ஆண்டையொட்டி நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை பெருமைமிக்க நாள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் அங்கு அனைத்தும் மாறிவிட்டது. தலிபான்கள் ஆட்சி செய்வதற்கும் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவதற்காகவும் திணறி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவானது பல லட்சக்கணக்கானோரை வறுமையின் பிடியிலும், பட்டினியிலும் தள்ளியுள்ளது. வௌிநாட்டு நிதியுதவிகள் வெகுவாக குறைந்துவிட்டன. பெண்கள், பெண் கல்வி, பெண்களுக்கு வேலைவாய்ப்புக்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

  • london-vertical-farm-29

    நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்