SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாகும்; சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சூளுரை

2022-08-16@ 00:52:11

புதுடெல்லி: ‘அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாகும்’என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சூளுரைத்து உள்ளார். நாடு சுதந்திரமடைந்து 75வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 76வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்ற இருந்ததையொட்டி, விழாக்கோலம் பூண்டிருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். சுதந்திர தின விழாவுக்காக புறப்பட்ட பிரதமர் மோடி, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

பின்னர், செங்கோட்டைக்கு சென்ற அவர், 9வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, எம்ஐ-17 ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது. தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி 82 நிமிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவிற்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாள். சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவு பெறுவது ஒரு புதிய தீர்மானத்துடன் முன்னேற வேண்டிய தருணம். நாட்டின் பன்முகத்தன்மை, குடிமக்களிடையே ஒற்றுமை, பாலின சமத்துவம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் கூட்டுறவு கூட்டாட்சியை வலுவாக உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கு மரியாதை அளிப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தூண். பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் எதையும் நாங்கள் செய்யவில்லை. தேசம் இப்போது பெரிய இலக்குகளை நிர்ணயித்துக்  கொண்டிருக்க வேண்டும். அந்த பெரிய இலக்கு வளர்ந்த இந்தியாவாகும். குடும்ப  அரசியல், ஊழலுக்கு எதிரான போரில் இந்தியா ஒரு தீர்க்கமான சகாப்தத்தில்  நுழைந்துள்ளது. ஊழலும், வாரிசு அரசியலும் நாட்டை கரையான் போல் தின்று கொண்டிருக்கிறது.

அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம்,  அடிமைத்தனத்தின் ஒவ்வொரு தடயத்தையும் அகற்றுவோம், பெருமைப்படுவோம்,  நாட்டின் பாரம்பரியத்தில், ஒற்றுமையை வளர்ப்பது மற்றும் அவர்களின் கடமைகளை  நிறைவேற்றுவது என 5 உறுதிமொழிகளை எடுக்க வேண்டும். இந்த ஐந்து தீர்மானங்களை மனதில் கொண்டு நாம் முன்னேறி, 100வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், அடுத்த 25 ஆண்டுகளில் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
இந்தியா ஜனநாயகத்தின் தாய். நமது பன்முகத்தன்மையில் இருந்து நமக்கு உள்ளார்ந்த பலம் உள்ளது என்பதை நமது தேசம் நிரூபித்துள்ளது. தேசபக்தி இந்தியாவை அசைக்க முடியாததாக ஆக்குகிறது.

கடந்த ஆட்சியில் வங்கிகளை கொள்ளையடித்துவிட்டு ஓடியவர்களை மீட்க முயற்சித்து வருகிறோம். அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்துள்ளோம். பலரை சிறையில் வாட வைத்துள்ளோம். நாட்டை கொள்ளையடித்தவர்கள் திருப்பி கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சி. அதற்கான சூழ்நிலையை அரசு உருவாக்குகிறது. எங்களுக்கு வெவ்வேறு திட்டங்கள் மற்றும் பணி பாணிகள் இருக்கலாம். ஆனால் தேசத்திற்கான எங்கள் கனவுகள் வேறுபட்டவை அல்ல. நாட்டை அபிவிருத்தி செய்ய ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பல மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இன்றைய காலத்தின் தேவை கூட்டுறவு கூட்டாட்சியுடன் கூட்டுறவு போட்டி கூட்டாட்சி. வளர்ச்சியில் எங்களுக்கு போட்டி தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்