சூர்யா, அபர்ணா, ஜி.வி.பிரகாஷ் உள்பட தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் பாராட்டு
2022-08-15@ 01:08:03

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 6வது செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தலைவர் நாசர், துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அப்போது கடந்த 2020ம் ஆண்டுக்கான தேசிய விருது பெற தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, திரைக்கதை ஆசிரியர் சுதா கொங்கரா, நடிகைகள் அபர்ணா பால
முரளி, லட்சுமிப்பிரியா சந்திர மவுலி, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், எடிட்டர் கர் பிரசாத், இயக்குனர்கள் வசந்த், மடோன் அஸ்வின், ஆர்.வி.ரமணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
அவர்களை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. விருது பெற்ற அனைவரும் நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்தனர். முடிவில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக,‘விருமன்’படக்குழு சார்பில் 25 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இதை கார்த்தி,‘விருமன்’படத் தயாரிப்பாளர் சூர்யா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண் டியன் இணைந்து காசோலை மூலமாக வழங்கினர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் போது திடீரென தீப்பற்றிய மாநகராட்சி வாகனம்..!!
நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலுபதில்
அம்பத்தூர் பால் பண்ணையில் இயந்திர கோளாறு காரணமாக பால் அனுப்ப கால தாமதம்: அதிகாரிகள் பணியிடைநீக்கம்
நெல்லையில் ஐபிஎஸ் அதிகாரி கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!