SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுக்குபாய் பிரியாணி உணவகம் அரங்கு அமைக்க முன்வந்ததை அடுத்து சென்னை தீவு திடல் உணவுத்திருவிழாவுக்கு பீப் பிரியாணிக்கு அனுமதி

2022-08-13@ 11:29:00

சென்னை: சென்னை தீவு திடலில் நடைபெறும் உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி இல்லை என சர்ச்சை எழுந்த நிலையில், விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்தால் அனுமதிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து சுக்குபாய் பிரியாணி உணவகம் அரங்கு அமைக்க முன்வந்ததை அடுத்து பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தீவு திடலில் ‘‘சிங்கார சென்னை உணவு திருவிழா 2022’’ நேற்று முதல் தொடங்கி வரும் 14 ம் தேதி வரை பாரம்பரிய உணவு வகைகளுடன்  நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து இவ்விழா நடத்தப்படுகிறது. அதன்  துவக்க விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ,உணவு பாதுகாப்பு துறை இயக்குனர், செயலாளர் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

150 அரங்குகள் மூலம் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை, சிறுதானிய உணவுகள் உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு இந்த உணவு கண்காட்சியின் மூலம் ஏற்படுத்தப்படும். உணவு தர நிர்ணயத்தில் முதல் மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவை அரசு பெற்றுக்  கொண்டு பசியால் வாடும் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மாசுப்பிரமணியன் தெரிவித்தார்.  இதில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்பட அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

மேலும் இந்த உணவு கண்காட்சியில் மட்டன்  பிரியாணி, சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளுக்கு தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பீப் பிரியாணிக்கு ஏன் அரங்கு அமைக்கப்படவில்லை என்று கேள்வி எழுந்தது. அதற்க்கு நான் கூட பீப் பிரியாணி சாப்பிடுவேன், உணவு என்பது தனி மனித உரிமை பீப் பிரியாணி அரங்கம் அமைக்க கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அனுமதி வழங்கி இருப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியர்ந் கூறியிருந்தார்.

இந்நிலையில், சுக்குபாய் பிரியாணி உணவகம் அரங்கு அமைக்க முன்வந்ததை அடுத்து பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

  • asssss

    ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு

  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்