SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒன்றிய அரசு அறிவிப்பு: யானைகள் காப்பகமானது அகத்தியர் மலை

2022-08-13@ 00:55:56

புதுடெல்லி: நெல்லை மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலையை தமிழகத்தின் 5வது யானைகள் காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிரசித்தி பெற்ற அகத்தியர் மலையில், 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2,761 யானைகள் இருப்பது தெரியவந்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இது, தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சில வனப்பகுதிகளிலும், கேரளாவின் கொல்லம், திருவனந்தபுரம், மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது.

இந்நிலையில், அகத்தியர் மலையை யானைகள் காப்பகமாக மாற்றப்படுவதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது டிவிட்டர் பதிவில், ‘உலக யானைகள் தினமான இன்று தமிழகத்தில் உள்ள அகத்தியர்  மலையின் 1,197 சதுர கி.மீ பரப்பளவைச் மேலும் ஒரு யானைகள் காப்பகமாக நிறுவுவதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,’ என தெரிவித்துள்ளார். இது தமிழகத்தின் 5வது யானைகள் காப்பகம்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்