உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.5.43 கோடியில் சைக்கிள்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
2022-08-13@ 00:00:49

சென்னை: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.5.43 கோடி செலவில் மிதிவண்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் முதல்வர் தலைமை செயலகத்தில், நேற்று மு.க.ஸ்டாலின் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் மற்றும் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 பயணிகளுக்கு ரூ.4.56 கோடி மானியத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.5 கோடியே 43 லட்சத்தில் 10,583 உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விதமாக 3 உலமாக்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், 2022ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 ஹஜ் பயணிகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஹஜ் மானியத் தொகையாக நபர் ஒருவருக்கு ரூ.27,628 வீதம், மொத்தம் ரூ.4.56 கோடி வழங்கும் விதமாக, 5 ஹஜ் பயணிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
Tags:
Ulemas Staff Welfare Board Member Cycles Chief Minister M.K.Stalin உலமாக்கள் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் சைக்கிள்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின்மேலும் செய்திகள்
சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்: பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!