SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டீல், ஜவுளி அதிபர் வீடுகளில் சோதனை ரூ.56 கோடி, 32 கிலோ தங்கம் ரூ.390 கோடி சொத்து பறிமுதல்: 13 மணி நேரம் பணத்தை எண்ணிய அதிகாரிகள்

2022-08-12@ 00:16:02

ஜால்னா: ஸ்டீல் மற்றும் ஜவுளி அதிபர் வீடு, அலுவலகங்களில் நடந்த ஐடி ரெய்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.56 கோடி, ரூ.32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, அவுரங்காபாத் 9+-ஜால்னாவில் உள்ள ஸ்டீல் மற்றும் ஜவுளி அதிபர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதி அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.56 கோடி, 14 கோடி மதிப்புள்ளான 32 கிலோ தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட கட்டுக்கட்டான பணத்தை எண்ண மட்டும் அதிகாரிகளுக்கு 13 மணி நேரம் ஆனது. இதுகுறித்து, வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ரெய்டில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு ரூ.390 கோடி என நம்பப்படுகிறது. இந்த ரெய்டில் பிடிபட்ட பணத்தை எண்ணும் பணியில் 260 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து இயந்திரம் உதவியடன் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்’’ என தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்