SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தியாகதுருகம் அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு, சிலைகள் கண்டுபிடிப்பு

2022-08-11@ 16:09:37

தியாகதுருகம்:  கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வடதொரசலூர் கிராமத்தில்  ஏரிக்கரைஅருகே பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில்  வளாகத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட 7 அடிகொண்ட சிவலிங்கம்  ஒன்றுஉள்ளது. அதனை அவர்கள் இன்று வரை பழமலைநாதர் என்று  அழைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட  வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்காரஉதியன்  தலைமையில், தொல்லியல்ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,  காப்பாட்சியர் ரஷீத்கான், நூலகர் அன்பழகன், பண்ருட்டி இமானுவேல்,  ஆசிரியர் உமாதேவி ஆகியோர் கடந்த 9ம்தேதியன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். அதில், 5 அடி நீளம் 3 1/2 அடி அகலத்தில் உள்ள கல்லில் இருபுறமும்எழுத்துக்கள்பொறிக்கப்பட்டுள்ளன. இரு  பக்கத்திலும் இரண்டாம் குலோத்துங்கசோழனின் 12 ஆம் நூற்றாண்டு  கல்வெட்டு.முழுமையாகப் படித்து அறியமுடியாத 44 வரிகளைக் கொண்டது.  எழுத்துகள் சிதைந்து உள்ளன.மேலும், இரண்டாம் குலோத்துங்கசோழனின் பூமேவி  வளரஎன்னும் மெய்க் கீர்த்தி முழுமையாக இக்கல்வெட்டில்இடம்பெற்றுள்ளது. மேலும்  இவ்வூரைபிரமதேயமாகவும், சதுர்வேதி  மங்களமாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில்இவ்வூரின் பெயரை  அறியமுடியாதவண்ணம்சிதைந்துள்ளது. இங்குள்ள இறைவன் பெயரை  அகத்தீஸ்வரமுடையமகாதேவர் என்று அழைக்கப்படுகிறார்.

கி.பி.1133 முதல்  1150 வரை அரசாண்ட இரண்டாம் குலோத்துங்கசோழன் காலத்தில் இப்பகுதியை ஆட்சி  செய்த திருநீரேற்றான்ராஜேந்திரசோழமலையகுலராயன் என்ற சிற்றரசன் காலத்தில்  பல்வேறு அளவுகோலால்அளவீடு செய்யப்பட்ட 4004 குழிகள் கொண்ட நிலத்தை  அகத்தீஸ்வரர்ஆலயத்திற்கு தினசரி பூசைக்காகத் தானம் அளிக்கபட்ட செய்தி காணப்படுகிறது.மேற்கண்ட நிலங்களுக்கு எல்லைகள்குறிப்பிடப்பட்டுள்ளன. மிகப்பெரிய சிவாலயம் ஒன்று இங்கிருந்ததற்கானஆதாரமாக இப்பகுதியைச்சுற்றிக்  காணப்படும் நேர்த்தியானப்பழமைவாய்ந்த, பல்வேறு அளவுகளில் உள்ள  சிலைகளும்கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆய்வின்போது வடதொரசலூர் ஊராட்சிமன்றத் தலைவர் பாண்டியன், புலவர்  நாராயணசாமி, ராஜா, விசுவநாதன், வை. வடிவேல், பாலு, கிருஷ்ணமூர்த்தி  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • om-mathan-kark

  சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்