கட்டி முடிக்கப்பட்டுள்ள மானாமதுரை வாரச்சந்தை கட்டிடத்தை திறக்க வேண்டும்: பொதுமக்கள், வியாபாரிகள் வேண்டுகோள்
2022-08-11@ 15:01:26

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தை வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. தற்காலிகமாக ஆற்றுக்குள் நடத்தப்பட்ட கடைகள் அமைந்துள்ள இடம் வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரிநீரில் மூழ்கியதால் வியாபாரம் நடத்த முடியாமல் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே புதிய கட்டிடங்களை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மானாமதுரை கீழ்கரை பேரூராட்சி அலுவலகம் அருகே கன்னார்தெரு ரோட்டில் உள்ள பழைய கட்டிடங்களில் வியாழன் தோறும் வாரச்சந்தை நடந்து வந்தது. இந்த சந்தைக்கு சிவகங்கை ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வருவார்கள். மானாமதுரை திருப்புவனம், இளையான்குடி சிவகங்கை தாலுகாவிற்குட்பட்ட 300க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த இருபதாயிரம் மக்கள் வந்து செல்வது வழக்கம். வாரச்சந்தை நாட்களில் சராசரியாக ஐநூறு டன் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வரும். மேலும் ஆடுகள், கோழிகள், மீன்கள், கருவாடு, விவசாய கருவிகள், உரங்கள், செடிகள் உள்ளிட்டவைகளும் விற்கப்படுகிறது.
கடந்த 2020ம் ஆண்டு 200க்கும மேற்பட்ட கடைகள் கடைகள் பழுதடைந்து போனதால் அவற்றை இடித்து விட்டு புதிதாக கடைகள் அமைக்கும் பணி துவங்கியது. புதிய கடைகளுக்கு இரவு நேரங்களில் செயல்படும் வகையில் மின்சாரம், கட்டணக் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடந்து வந்த கட்டிடப் பணி முடிந்துள்ள நிலையில் கடைகளுக்கு முன் உள்ள தரையில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் வேலை மட்டுமே உள்ளது. கடந்த ஒராண்டுக்கும் மேலாக வைகை ஆற்றுக்குள் வாரச்சந்தை நடந்து வந்தது. இந்நிலையில் வைகை பிரதான பாசன கண்மாய்களில் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்ட உபரிநீர் கடந்த நான்கு நாட்களாக ஆற்றின் இருகரைகளையும் தொட்டு செல்வதால் வைகை ஆற்றின் கரைகளை பலப்படுத்தி பொதுமக்கள், வியாபாரிகள் கடைகளை அமைக்கவும், பொருட்களை வாங்கவும் ஆற்றின் உள்ளே செல்ல முடியாதவாறு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று(வியாழன்) கடைகளை ஆற்றுக்குள் அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே கட்டிமுடிக்கப்பட்ட கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து காய்கறி வியாபாரி மதியழகன் கூறுகையில், கடந்த முப்பது ஆண்டுகளாக மானாமதுரை வாரச்சந்தையில் கடைகள் அமைத்து வருகிறேன். காளையார்கோயில், சிவகங்கை, திருப்புவனம் பகுதிகளில் நடைபெறும் சந்தைகளை காட்டிலும் மானாமதுரையில் அதிகளவு மக்கள் கூடுவதால் வியாபாரமும் நன்றாக நடக்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்தை கடை ஆற்றுக்குள் அமைக்கப்படுவதால் வெயில் காலங்களிலும் மழை காலங்களிலும் கடைகளை ஆற்றுக்குள் அமைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சித்திரை திருவிழாவின் போது இரண்டு வாரம் கடைகள் அமைக்க முடியவில்லை. சிவகங்கை ரோடு, பழைய காளையார்கோயில் ரோடு, பழைய பரமக்குடி ரோடுகளில் அருகே கடைகளை அமைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கட்டிமுடிக்கப்பட்ட கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!