தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்
2022-08-11@ 07:45:44

டெல்லி: தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை என ஒன்றிய அரசு அளித்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டையொட்டி, நாளை முதல் 3 தினங்களுக்கு சமூக வலைதளங்களில் டிபி.யாகவும் வீடுகளிலும் மூவர்ண கொடியை வைக்க அரசின் பல்வேறு துறைகளும் மக்களை வலியுறுத்தி உள்ளன. இதனிடையே ஹரியானா மாநிலம் ரேவாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தேசிய கொடி வலுக்கட்டாயமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்னல் மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் தேசியக்கொடி வாங்கினால் தான் உணவுப்பொருள் வழங்கப்படும் என கட்டாயப்படுத்தியதால் ஆத்திரமடைந்தனர்.
இதையடுத்து சில பெண்கள் மூவர்ண கொடிகளை கையில் ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தை அடுத்து ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது. தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கொடி வாங்க நுகர்வோரை வற்புறுத்தக்கூடாது எனவும் ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
அவைக் குறிப்பில் இருந்து ராகுல் காந்தி பேசியதை நீக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தல்
உதான் திட்டத்தில் ஓசூர் விமான நிலையம் இடம்பெறாது என அறிவிப்பு: தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக திமுக புகார்..!
சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பு; ஒரு நாளைக்கு 3,500 நிதி மோசடி புகார்: பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தகவல்
மேகாலயா சட்டசபை தேர்தல்: 60 சிட்டிங் எம்எல்ஏ உட்பட 379 பேர் வேட்புமனு தாக்கல்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத டபுள் டக்கர் இ-பஸ் சேவை ஐதராபாத்தில் தொடக்கம்: பயணிகள் உற்சாகம்
மகளின் திருமணத்திற்கு கோட்டையை புக்கிங் செய்த ஒன்றிய அமைச்சர்: ராஜஸ்தானில் தடபுடல் ஏற்பாடு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!