SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநி மலைக்கோயில் ரோப்காரில் முதியோருக்கு தனி வழி

2022-08-10@ 03:06:29

பழநி: பழநி மலைக்கோயில் ரோப்காரில் முதியோருக்கான தனிவழி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பழநி கோயிலில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள், பழநி கோயில் கும்பாபிஷேக பணிகளை விரைவுபடுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஆக.23ம் தேதி உபயதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அறங்காவலர் குழுவினர் பழநி கோயில் ரோப்கார் நிலையத்தில் முதியோர், கைக்குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட தனிவழியினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்