SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவீனமயமாக்கல் மட்டுமே மேற்கொள்கிறோம் போக்குவரத்து கழகம் தனியார்மயம் இல்லை; அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

2022-08-09@ 00:43:06

சென்னை: தமிழக போக்குவரத்து கழகதனியார்மயமாக்கப்படாது என்று அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகர பேருந்துகளை  தனியாரிடம் வழங்குவதா. அதை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு, கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகங்கள் கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது.

மேலும், சமூக நலன், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பிற்காக அனைத்து மகளிர், மாணவர்கள், மூன்றாம் பாலினர், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள்  உட்பட பலருக்கு கட்டணமில்லா பேருந்து சலுகையினை  வழங்கி வருகிறது. மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில், பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது என்பது தனியார்மயமாக்கல் அல்ல என்பதையும், அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதையும்  திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்