மணலி எம்ஜிஆர் நகர் புதிய மேம்பால பகுதியில் மாநகராட்சி பெண் ஊழியர் கொலை? அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
2022-08-08@ 00:01:33

திருவொற்றியூர்: மணலி எம்ஜிஆர் நகர் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அருகில், நேற்று காலை அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம் கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள், மணலி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சடலமாக கிடந்தது திருவொற்றியூர் பூங்காவனபுரம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மனைவி மைதிலி (38) என்பதும், இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி செய்து வந்ததும் தெரிந்தது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மைதிலிக்கும், திருவொற்றியூரை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, வெளியில் பல இடங்களில் பைக்கில் சுற்றித் திரிந்துள்ளனர். இதுபற்றி அறிந்த மணிமாறன், தனது மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் சந்திப்பில் மணிமாறன் நின்று கொண்டிருந்தபோது, அவரது மனைவி மைதிலி ஜெய்சங்கருடன் பைக்கில் வந்து இறங்கியுள்ளார். இதை பார்த்த மணிமாறன், இருவரையும் பிடித்து, தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இனிமேல் என் மனைவியோடு உன்னை பார்த்தால் தொலைத்து விடுவேன் என்று ஜெய்சங்கரை எச்சரித்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வந்த மணிமாறன், தனது மனைவி மைதிலியை 2 நாட்களாக காணவில்லை, என்று புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், எம்ஜிஆர் நகர் மேம்பால பகுதியில் மைதிலி உடல் அழகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும், கடந்த 3ம் தேதி மணிமாறன் தனது மனைவி மைதிலியை பைக்கில் இந்த பாலம் வழியாக அழைத்து சென்றதை அப்பகுதியில் இருந்த சிலர் பார்த்துள்ளனர். எனவே, மணிமாறனை மணலி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், மணிமாறன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து வருவதால், அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்கு பிறகுதான், கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை மணிமாறன் கொன்றாரா அல்லது வேறு காரணமா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
அதிமுக விவகாரத்தில் புதிய திருப்பம்; நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார்: ஓபிஎஸ் தரப்பு உறுதி..!
தமிழ்நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும்: ராமதாஸ் ட்வீட்
இரட்டைத் தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது; அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..!
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை..!
குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!