SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

கணவர் குடும்பத்தினர் அடித்து சித்ரவதை.! நியூயார்க்கில் சீக்கிய பெண் தூக்கில் தொங்கி தற்கொலை: வீடியோவில் மரண வாக்குமூலம்

2022-08-08@ 00:00:59

புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த இந்திய பெண் மந்தீப் கவுர் (30) என்பவர், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஆறு மற்றும் நான்கு வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மந்தீப் கவுர் ெவளியிட்ட வீடியோ பதிவில், ‘ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது; தினமும் அடிபடுவதை என்னால் தாங்க முடியவில்லை. எனது கணவர் மற்றும் மாமியார் என்னை தற்கொலைக்கு தூண்டினர்.

என் தந்தையே, நான் இறக்கப்போகிறேன்; தயவுசெய்து என்னை மன்னியுங்கள்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் வசிக்கும் மந்தீப் கவுரின் பெற்றோர், தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், ‘எங்கள் மகளின் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகளின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதர அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்