கேரளாவில் தொடர் கனமழை: இடுக்கி அணைக்கு ரெட் அலர்ட்
2022-08-06@ 14:50:02

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர் மழை காரணமாக இடுக்கி அணைக்கு இன்று காலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்பட அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் மழைக்கு 22 பேர் பலியானார்கள். கனமழையைத் தொடர்ந்து இடுக்கி அணை நீர்மட்டம் கடந்த சில தினங்களாக வேகமாக உயர்ந்து வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் நீர்மட்டம் 2376.82 (கடல் மட்டத்திலிருந்து) அடியாக உயர்ந்ததை தொடர்ந்து அணைக்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு நீர்மட்டம் 2381.78 அடியாக உயர்ந்தது. இதனால் அணைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இன்று காலை 7.30 மணியளவில் நீர்மட்டம் 2382.52 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் 2383.53 அடியானால் மட்டுமே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் இடுக்கி அணைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அணையை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
டிக்கெட் கட்டணத்தை விமான நிறுவனங்களே நிர்ணயிக்கலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பால் பயணிகள் கவலை
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கொச்சி-தனுஷ்கோடி சாலையில் போக்குவரத்திற்கு அனுமதி
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்; பொது போக்குவரத்து வாகனங்களை மட்டும் பயன்படுத்துங்கள்: அரசு, சொந்த வாகனங்களை தவிர்க்க டெல்லி போக்குவரத்து துறை உத்தரவு
தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்
விவசாயிகள் உதவித் தொகை பெற ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு
இந்தியாவில் Fastag பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 35 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!