காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாடவீதியில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
2022-08-06@ 03:22:25

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயில் மாடவீதிகளில் காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், காமாட்சி அம்மன் கோயில் மாட வீதிகளில் சிறுகடைகள் ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து காமாட்சி அம்மன் கோயில் மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், மாநகராட்சி சார்பில் சாலை ஓரம் பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருபவர்களுக்கு கடைகளை அகற்ற பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடைகளை அகற்றாத காரணத்தினால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதனை தொடர்ந்து நேற்று மாநகராட்சி அதிகாரிகள் நகர ஊரமைப்பு அலுவலர் ஜெயந்தி தலைமையில் வருவாய் அலுவலர் தமிழரசன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் நடைபாதை மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து இருந்த கடைகளை அகற்றினர். அப்போது, அகற்ற வந்த அதிகாரிகளுடன் சில கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகள்
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!
வங்கியில் இன்வெர்ட்டர்கள் வெடித்தது: கொடுங்கையூரில் பரபரப்பு
காற்றில் கலந்த கான மேகம்: 'ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி' என புகழப்படும் பாடகி வாணி ஜெயராம் காலமானார்..!
புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: தென்தமிழகம் , வடதமிழக மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்
வட்டிக்கு பணம் வாங்கிய பிரச்னையில் மூதாட்டியை கொடூரமாக கொன்ற ஆயுதப்படை போலீஸ்காரர் கைது: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!