தமிழகம் முழுவதும் 2022-23ம் ஆண்டுக்கான செயல் அலுவலர்கள் 19 பேருக்கு பதவி உயர்வு; அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அறிவிப்பு
2022-08-06@ 00:43:19

சென்னை: 2022-23ம் ஆண்டுக்கான செயல் அலுவலர் நிலை-2 லிருந்து நிலை-1க்கு பதவி உயர்வு பெறத் தகுதி வாய்ந்த செயல் அலுவலர்களுக்குப் முதுநிலைப்படி பதவி உயர்வு அளித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2022-23ம் ஆண்டுக்கான செயல் அலுவலர் நிலை-2 லிருந்து நிலை-1க்கு பதவி உயர்வு பெறத் தகுதி வாய்ந்த செயல் அலுவலர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பட்டியலில் இடம் பெற்றுள்ள கீழ்க்கண்ட செயல் அலுவலர்களுக்குப் முதுநிலைப்படி பதவி உயர்வு அளித்து ஆணை பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதவி உயர்வு பெற்ற செயல் அலுவலர்களுக்கு நிலை-1 பதவியில் பணிநியமனம் அளித்து ஆணையிடப்படுகிறது.
அதன்படி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கற்பகநாதர் கோவில் அறிவழகன் பதவி உயர்வு பெற்று சமயபுரம் (அயற்பணி) மாரியம்மன் கோவிலுக்கும், கோவை நகர், கோட்டை சங்கமேஸ்வரர் ஜெயசெல்வம் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்டம், மாரியம்மன் விநாயகர் கோவிலுக்கும், நெல்லை மாவட்டம், வீரவநல்லூர், பூமிநாகசுவாமி கோவில் வெங்கடேஸ்வரன் பதவி உயர்வு ெபற்று திருச்செந்தூர் (அயற்பணி), சுப்ரமணியசுவாமி கோவிலுக்கும், திருச்சி மாவட்டம், துறையூர் நகர், பிரசன்ன வெங்கடாஜலபதி யுவராஜ் பதவி உயர்வு பெற்று ஈரோடு மாவட்டம், கொடுமுடி, மகுடேஸ்வரர் கோவிலுக்கும், சேலம் மாவட்டம், சித்தேஸ்வரர் கோவில் சங்கரன் பதவி உயர்வு பெற்று சேலம், சங்ககிரி வட்டம், வரதராஜப் பெருமாள் கோவில் உள்பட 19 பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள செயல் அலுவலர்களைத் தக்க மாற்று ஏற்பாடுகள் செய்து உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்குமாறு தொடர்புடைய இணை ஆணையர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் வார்டு மறுவரையறை செய்யப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!
அரசு பேருந்து மோதி மகன் கண் முன் தாய் பரிதாப பலி
கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து மை பூசி அழிப்பு: மர்ம நபருக்கு வலை
கோயம்பேட்டில் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் ரகளை
துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் காவல் படை: சென்னை கமிஷனர் அதிரடி
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!