SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரியபாளையத்து பவானி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

2022-08-05@ 00:22:03

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகே தேவலம்பாபுரம் கிராம தேவதை ஸ்ரீ பெரியபாளையத்து பவானி அம்மனுக்கு புதிய ஆலயம் கட்டப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா 3 நாட்களாக வெகு விமர்சையாக  நடைபெற்றது. விழாவையொட்டி திருக்கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம்,  தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு மஹா பூர்ணாஹுதி ஹோம பூஜைகள் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றுது.  கோபுர கலசத்திற்கு புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் மீது தீர்த்த நீர் தெளிக்கப்பட்டது. இதனை அடுத்து பெரியபாளையத்து பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் தொடர்ந்து புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை பூஜைகள் செய்து பக்தர்கள் அம்மனை வழிபட்டினர்‌.

திருக்கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது‌. மஹா கும்பாபிஷேக விழாவில் முன்னாள்  திமுக ஒன்றிய கவுன்சிலர்  சிலம்பு பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயானந்தன், முன்னாள் கூட்டுறவு சங்க சூப்பர்வைசர் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், உமாபதி பெங்களூர் தொழிலதிபர் கௌதம் தாட்சாயணி, மெக்கானிக் மோகன், ஊராட்சி செயலாளர் சிவானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை  கிராம பொதுமக்கள் மற்றும் ஓம் சக்தி பக்த கோடிகள்  சிறப்பாக செய்திருந்தனர். பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையம் முசலையன் கண்டிகை கிராமத்தில் உள்ள ஸ்ரீ தண்டு மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

நான்கு கால பூஜைகளுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க ஆலய கோபுரவிமானங்களுக்கும், ஸ்ரீ விநாயகர், முருகர், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார சன்னதிகளுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் அங்கு கூடியிருந்த மக்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது, ‘ஓம் சக்தி பராசக்தி எனும் கோஷங்கள் முழங்க,வான வேடிக்கைகளும், மேளதாளங்கள் முழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தை மீஞ்சூர் விஜயகுமார் சிவாச்சாரியார், காட்டூர் தியாகராஜ குருக்கள், ஆலய பூசாரி முரளி சுவாமி பூஜைகளை செய்தனர். இதில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்