SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமன்வெல்த் விளையாட்டு திருவிழா

2022-08-05@ 00:04:36

* ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் போட்டிகளில் இந்தியாவின் கிடாம்பி காந்த், பி.வி.சிந்து இருவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் பிரிவு முதல் சுற்றில் உகாண்டாவின் டேனியல் வனகலியாவுடன் நேற்று மோதிய கிடாம்பி 21-9, 21-9 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். மாலத்தீவுகள் வீராங்கனை பாத்திமா நபாஹாவுடன் மோதிய சிந்து 21-4, 21-11 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார்.
* மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற இந்திய நட்சத்திரம் ஹிமா தாஸ் (22 வயது) 23.42 விநாடிகளில் பந்தயதூரத்தைக் கடந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
* ஆண்கள் குத்துச்சண்டை 92 கிலோ சூப்பர் ஹெவிவெயிட் பிரிவில் செஷேல்ஸ் வீரர் கெடி எவன்சை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய இந்திய வீரர் சாகர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.
* ஆண்கள் குத்துச்சண்டை பிளைவெயிட் பிரிவு (48-51 கி.) அரையிறுதிக்கு முன்னேறிய அமித் பாங்கல் மற்றும் மகளிர் லைட் வெயிட் பிரிவு (60 கி.) அரையிறுதிக்கு முன்னேறிய ஜெய்ஸ்மைன் இருவரும் இந்தியாவுக்கு பதக்கங்களை உறுதி செய்து அசத்தினர்.
* மகளிர் 78 கிலோ எடை பிரிவு ஜூடோவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை துலிகா மான், ஓராண்டுக்கு முன் 115 கிலோவாக இருந்த தனது எடையை கடுமையாகப் பயிற்சி செய்து குறைத்து காமன்வெல்த் போட்டிக்கான அணியில் இடம் பிடித்ததுடன் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

* ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா
கமன்வெல்த் தொடரின் ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் நேற்று மோதிய இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் ஹாட்ரிக் கோல் போட்டு அசத்தினார். குர்ஜாந்த் சிங் ஒரு கோல் போட்டார். வேல்ஸ் தரப்பில் கேரத் பர்லாங் ஆறுதல் கோல் அடித்தார். பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா 4 லீக் ஆட்டத்தில் 3 வெற்றி, 1 டிரா செய்து 10 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

பதக்க பட்டியல் டாப் 10
ரேங்க்    அணி    தங்கம்    வெள்ளி    வெண்கலம்    மொத்தம்
1    ஆஸ்திரேலியா    48    38    39    125
2    இங்கிலாந்து    39    39    29    107
3    கனடா    16    20    21    57
4    நியூசிலாந்து    16    10    11    37
5    ஸ்காட்லாந்து    7    8    17    32
6    தென் ஆப்ரிக்கா    6    7    7    20
7    இந்தியா    5    6    7    18
8    வேல்ஸ்    4    4    10    18
9    மலேசியா    3    2    3    8
10    நைஜீரியா    3    1    4    8

Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்