கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் அரசு பேருந்துக்கு நடுரோட்டில் காத்திருக்கும் மாணவர்கள்: விபத்து நிகழும் அபாயம்
2022-08-04@ 15:35:21

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் நடுரோட்டிலேயே பள்ளி மாணவ-மாணவிகள் அரசு பேருந்துக்காக காத்திருக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. இதனால் அங்கு அதிகளவு வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படலாம் என மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
சென்னை அருகே கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரம் கடந்த 2012ம் ஆண்டு, ரூ.2 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இங்கு கோயம்பேடு, தாம்பரம், தி.நகர், பிராட்வே உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான மாநகர பஸ்கள் வந்து செல்கின்றன. நவீன கட்டண கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருந்தும், நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்பால் மாநகர மற்றும் அரசு பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லாமல், ஜிஎஸ்டி சாலையிலேயே நின்று செல்கின்றன.
மேலும், ஜிஎஸ்டி சாலையோரத்தில் பர்மிட் இல்லாத ஏராளமான ஷேர் ஆட்டோக்கள், வேன்கள், தனியார் பேருந்துகள் நீண்ட வரிசையில் பயணிகளை ஏற்றி செல்வதற்கு நிறுத்தப்படுகின்றன. இதனால் மாநகர மற்றும் அரசு பேருந்துகள் ஜிஎஸ்டி சாலை நடுவிலேயே நிறுத்தப்படுகின்றன. இதையடுத்து, ஜிஎஸ்டி சாலை நடுவிலேயே பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அரசு பேருந்துக்காக காத்திருக்கும் அவலநிலை நீடித்து வருகிறது.
அதே சமயம் நடுரோட்டில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் காத்திருக்கும் நிலையில், அவ்வழியே வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயநிலை உள்ளது. இதனால் அங்கு அதிகளவு வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படலாம் என மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. எனவே, ஜிஎஸ்டி சாலையில் செல்லும் அரசு பேருந்துகள் சாலையோரத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில்
மெரினா கடற்கரையில் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட விவகாரம்: வீடியோ பதிவு மூலம் 20 மாணவர்களை கைது செய்யும் பணி தொடங்கியது
இந்தியாவிலேயே அதிக மாசுப்பட்ட ஆறு கூவம்: ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குறித்து இன்று மாலை அறிவிப்பு
புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!