திமுக உட்கட்சி தேர்தல்: ராயபுரம் பகுதி 48வது வட்ட செயலாளர், நிர்வாகிகள் தேர்வு
2022-08-04@ 00:11:31

தண்டையார்பேட்டை: திமுக உட்கட்சி தேர்தலில், வடசென்னை ராயபுரம் 48வது வட்ட திமுக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். சென்னை மாவட்டத்திற்கு திமுகவின் உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆணையாளர்களை திமுக தலைமை அறிவித்தது. சென்னை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.
இதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ராயபுரம் பகுதிக்கு உட்பட்ட 48, 48அ, 49, 49அ, 50, 50அ, 51, 51அ, 52, 52அ, 53, 53அ ஆகிய வார்டுகளுக்கு போட்டியிட்ட வட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கான தேர்தல் ராயபுரம் அறிவகத்தில் நேற்று நடந்தது. சென்னை வடக்கு மாவட்டத்திற்கு திமுக தலைமை அறிவித்த ஆணையாளர் ஆஸ்டின் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், பகுதி செயலாளர்கள் வ.பே. சுரேஷ், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
இதில், ராயபுரம் மேற்கு பகுதி 48வது வட்டத்திற்கு ஒரே அணி மட்டுமே மனுதாக்கல் செய்து இருந்தது. அதன்படி, இரா.பாலன் வட்டசெயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவருடன் துணை செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 21 பேர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மற்ற வட்டங்களுக்கு போட்டி போடுபவர்கள் கலந்து பேசி ஒரு அணியாக வாருங்கள் என தெரிவிக்கப்பட்டது. எனவே, மற்ற வட்டங்களுக்கு நிர்வாகிகள் கலந்து பேசி நியமிக்கப்படுவார்கள். இன்று ஆர்.கே. நகருக்கும், நாளை பெரம்பூர் பகுதிக்கும் தேர்தல் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் நேற்று நடந்த 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் நடைமேடை தடுப்பு கதவுகள்: சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் போது திடீரென தீப்பற்றிய மாநகராட்சி வாகனம்..!!
நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலுபதில்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!