நத்தம் பூதகுடியில் மலையாண்டி கோயில் திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்
2022-08-02@ 13:51:02

நத்தம்: நத்தம் அருகே பூதகுடி மலையாண்டி கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நத்தம் அருகே பூதகுடியில் உள்ள சதுரகிரி மலையில் உள்ள மலையாண்டி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் திங்கட்கிழமை திருவிழா நடைபெறும். அதன்படி நேற்று இக்கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
இதையொட்டி அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேல்களுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேற்றியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை எடுத்து வேல்களை காணிக்கையாக செலுத்தினர். பல பெண்கள் மடிசோறு பெற்று குழந்தை பாக்கியத்திற்காக வேண்டுதல் வைத்தனர். தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கிருஷ்ணன் மற்றும் நத்தம், கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி பகுதிகளை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள், பூதகுடி ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
அண்ணாமலை பல்கலையில் மிகையாக உள்ள பேராசிரியர்கள் உள்பட 1,390 பேர் பிற துறைகளுக்கு பணிநிரவல்: உத்தரவை திரும்ப பெற ஆசிரியரல்லா பணியாளர்கள் கோரிக்கை
சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடையால் தாணிப்பாறை வனத்துறை கேட் வெறிச்
வாணியம்படி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் அருகே ரூ.11 கோடியில் ஜவ்வாதுமலை-புதூர்நாடு சாலை பணி: மார்ச் இறுதிக்குள் முடியும் என கோட்ட பொறியாளர் தகவல்
சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!