இன்று மீண்டும் உயர்வை கண்ட தங்கத்தின் விலை... சவரன் ரூ.200 உயர்ந்து, ரூ.38,560-க்கு விற்பனை
2022-08-02@ 10:04:55

சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் தேதியில், ஒன்றிய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்ந்ததை தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, இறக்குமதி வரி அதிகரித்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனைக்கு வருகிறது.
இந்நிலையில், கடந்த 27, 28-ம் தேதிகளில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.256, ரூ. 304 என உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,800-க்கு அதிகமாகவும், ஒரு கிராம் ரூ.4,800-க்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்கவே அச்சப்படும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் சென்றனர். அதன் பின் சற்றும் குறைவை காணாத தங்க விலையானது நாளுக்குநாள் உயர்வை மட்டும் சந்தித்து வரும் நிலையில், இன்றும் சற்று உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.38,560--க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.4,820-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் அதிகரித்து, ரூ.63.60-க்கும், ஒரு கிலோ 63,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதனால் சாதாரண மக்கள் முதல் நகைப்பிரியர்கள் வரை பெரும் கலக்கம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை சிறிது அதிகரித்து இருப்பது, மக்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
அடுத்தடுத்து மரண அடி அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.7.5 லட்சம் கோடி சரிவு
பட்ஜெட் தினத்தில் மக்களுக்கு ஷாக்: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880க்கு விற்பனை..!
நகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி... இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை!: சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.42,704க்கு விற்பனை..!!
அதானி குழுமம் நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் செய்துள்ள முதலீடுகளால் நஷ்டம் இல்லை: எல்.ஐ.சி. நிறுவனம் விளக்கம்
தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு ஒரு சவரன் ரூ.42,800க்கு விற்பனை: பொதுமக்கள் கலக்கம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.42,800க்கு விற்பனை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!