SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

திமுக 15வது பொது தேர்தல்; சென்னை மாவட்டங்களில் உள்ள வட்டங்கள் விவரம்.! துரைமுருகன் அறிவிப்பு

2022-07-30@ 14:51:25

சென்னை: திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்டங்களில் உள்ள வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான விவரங்களை துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெற்ற மாவட்டங்களில் அவைத் தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், மாவட்ட பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட வாரியாக அனைத்து பதவிகளும் தேர்தல் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளின் வட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு ஆகிய மாவட்டங்களில் பகுதி கழக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளின் வட்டங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்