SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பு ரத்தின கற்கள் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் அதிரடி

2022-07-24@ 01:35:09

சென்னை: இலங்கையிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த ₹1 கோடி மதிப்புடைய 8,309 காரட் எடையுடைய 1,746 ரத்தின கற்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்த இலங்கை வாலிபரை சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்துகிறது.
இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதில் பெருமளவு கடத்தல் பொருட்கள் வருவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகளின் தனிப்படை பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த முகமது அன்சர் (24) என்ற பயணி, சுற்றுலா பயணிகள் விசாவில், சென்னை வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தனர். ஆனால் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், அவரை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து  பரிசோதித்த போது, அவர் வயிற்றுக்குள் ஏதோ விழுங்கி வந்துள்ளது தெரியவந்தது.

தொடர்ந்து, அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இனிமா கொடுத்து அவர் வயிற்றுக்குள் விழுங்கி வந்தவைகளை சிறிது சிறிதாக வெளியில் எடுத்தனர். அவருடைய வயிற்றுக்குள் சிறுசிறு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரத்தின கற்கள் வெளியே எடுக்கப்பட்டன.
மொத்தம் 1,746 ரத்தின கற்களை விழுங்கி கடத்திக் கொண்டு வந்திருந்தார். மொத்த எடை 8309 காரட். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 94.34 லட்சம். ஆனால் இந்தியாவில் இந்த ரத்தின கற்கள்  மதிப்பு சுமார் ₹1 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் இலங்கை பயணியை கைது செய்தனர். அவரிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இந்த ரத்தின கற்களை, சென்னையில் யாரிடம் கொடுக்க கடத்தி வந்தார் என்று விசாரணை நடக்கிறது. இதுபோல் ரத்தின கற்களை வயிற்றுக்குள் விழுங்கி கொண்டு வருவது மிகவும் ஆபத்தானது, உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்