SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடைசி நேரத்தில் ‘திக்... திக்’- தவான்: தோற்றாலும் எங்களுக்கு வெற்றி-பூரன்

2022-07-24@ 00:40:45

டிரினிடாட்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் கடைசி நேர பரபரப்பில் இந்தியா வெற்றி பெற்றதாக ேகப்டன் ஷிகர் தவான் கூறினார். இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டி நேற்று முன்தினம் டிரினிடாடில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி துவக்கத்தில் அதிரடியாக விளையாடியது. சுப்மன் கில் 53 பந்தில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் தவான் - ஸ்ரேயாஸ் ஐயர் 2வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் குவித்த நிலையில் கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயார் 54 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் ஏனோ, தானோவென விளையாட, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஜாரி ஜோசப், மோட்டி தலா 2, ரொமாரியோ ஷெப்பர்டு, அகில் ஹொசைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிராஜ் பந்து வீச்சில் ஷாய் ஹோப்பின் விக்கெட்டை 7 ரன்களுக்கு இழந்தாலும், அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் கைலே மேயர்ஸ் வெளுத்து வாங்கினார். இவர் 68 பந்தில் 75 ரன்கள் எடுத்து தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார். ப்ரூக்ஸ் 46, பிரண்டன் கிங் 54 ரன்களில் ஆட்டமிழந்தனர். முன்வரிசை வீரர்கள் சிறப்பான ரன் குவிப்பால் வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமான இருந்தன. ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அகில் ஹொசைன் - ரொமாரியோ ஷெப்பர்டு இருவரும் விளாசி தள்ளினர்.

இந்திய அணி தோற்று விடும் நிலையில் இருந்தது. ஆனாலும், கடைசி ஓவரை சிராஜ் கட்டுக்கோப்பாக வீச, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்களில் தோல்வியை தழுவியது. அகில் ஹொசைன் 32, ரொமாரியோ ஷெப்பர்டு 39 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ், தாக்குர், சஹல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று டிரினிடாட்டில் நடக்கிறது.

ஆட்ட நாயகன் விருது பெற்ற கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், ‘‘ சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தது வருத்தமளிக்கிறது. இருந்தாலும் அணியின் கூட்டு முயற்சியும், பங்களிப்புமே வெற்றிக்கு மிக முக்கிய காரணம். போட்டி கடைசி நேரத்தில் தலைகீழாக மாறியது. கொஞ்சம் பயமும் இருந்தது. ஒரு போட்டி எந்த பாதையில் செல்கிறதோ, அதற்கேற்ப திட்டமிட்டால் வெற்றி பெறலாம். இந்த போட்டி அதைத்தான் உணர்த்தியது. இனி வரும் போட்டிகளிலும் வென்று தொடரை வெல்வோம்’’ என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் கூறுகையில், ‘‘போட்டியில் ேதாற்றாலும் வெற்றி பெற்றதாவே உணர்கிறேன். 50 ஓவர்கள் வரை நின்று விளையாட வேண்டுமென திட்டமிட்டிருந்தோம். எங்களால் எது முடியும், எது முடியாது என்பதை இந்த போட்டி உணர்த்தியது. இது எங்கள் பலத்தை அறியவும், திறமையை மேம்படுத்தவும் உதவும். எங்கள் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்ட போதும், தோல்வியை தவிர்க்க முடியவில்லை’’ என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்