திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு ஓவியப் போட்டி: ஒன்றிய சேர்மன் மற்றும் பேரூராட்சி தலைவர் பரிசுகள் வழங்கினர்
2022-07-23@ 01:20:47

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சார்பில், எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் திருக்கழுக்குன்றம் பெண்கள் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த 50 மாணவிகள் கலந்துக் கொண்ட ஓவியப் போட்டி நடந்தது. இதில், 10 மாணவிகள் வெற்றி பெற்றனர். இந்த மாணவிகளுக்கு கேடயம் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்ட திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் ஜி.டி.யுவராஜ் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி கேடயங்களை வழங்கினர். பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், பள்ளியின் தலைமையாசிரியை எப்சிபா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, பழனி, விஜயகுமார், பூங்கொடி இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் கொள்ளை: 3 பேரை கைது செய்தது தனிப்படை.. 62 சவரன் நகை பறிமுதல்..!
துவங்கியது கோடைகாலம்: பழநி பகுதியில் மண்பானை விற்பனை ‘விறுவிறு’
பெரியகுளம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் நெல்மணிகள்: நெல் குடோன்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேவதானப்பட்டி பகுதி மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து அதிக மகசூலை அள்ளலாம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை ‘அட்வைஸ்’
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது..!!
சின்னச்சுருளி அருவியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: சுற்றுலா பயணிகள் வேதனை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!