SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் கிராமத்தில் சாலை வசதி வேண்டி சாலையில் நாற்று நட்ட கிராமமக்கள்-அதிகாரிகள் சமரசம்

2022-07-22@ 13:56:56

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் பொம்மி குப்பம் ஊராட்சி, 2 வார்டுக்கு உட்பட்ட ஜோன்றம்பள்ளி சாலை 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது இதனால் அந்த வழியாக பள்ளிக்குச் செல்கின்ற 1000 கணக்கான மாணவ- மாணவிகள், தனியார்  கல்லூரி பள்ளி வாகனங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், அந்தப் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் சாலையின் நடுவே நாற்று நட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்(கி.ஊ) மணவாளன்(வ.ஊ), ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி வெங்கடேசன், சமூக ஆர்வலர் ராதாகிருட்டிணன்  உட்பட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, தற்காலிகமாக முரம்பு மண் கொட்டி சமன்படுத்துவதாகவும், பிறகு நிரந்தரமாக தார் சாலை அமைக்கப்படும் என்று  உறுதி அளித்தனர். இதையடுத்து இளைஞர்கள் சமாதானம் அடைந்தனர். தொடர்ந்து, பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மேகலா, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் சாலை வசதி கோரி மனுவையும் அளித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்