கேரளாவில் பரபரப்பு பினராயை கொல்ல சதி மாஜி காங். எம்எல்ஏ கைது
2022-07-20@ 01:37:28

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு உண்டு என்று சொப்னா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த மாதம் பினராய் விஜயன் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். அப்போது விமானத்தில் அவருக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பர்சீன் மஜீத், நவீன்குமார் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் எம்எல்ஏவும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவருமான சபரிநாதனுக்கு போலீசார் நோட்டீஸ் கொடுத்தனர். அவர் திருவனந்தபுரம் சங்குமுகம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சபரிநாதன் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது சபரிநாதனை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், விமானத்தில் வைத்து முதல்வர் பினராய் விஜயனை கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டியுள்ளனர். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு லட்டு கிடைக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி தகவல்
சேலையால் கழுத்தை நெரித்து கணவனை கொன்ற மனைவி கைது
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு
அடிதடி வழக்கில் இருந்து மகனை விடுவிப்பதாக கூறி தாய்க்கு செக்ஸ் டார்ச்சர்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
அழகு சாதன கிரீம் பூசிய 3 பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு: மும்பையில் சோகம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!