SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்: சிந்து சாய்னா வெற்றி

2022-07-14@ 00:55:17

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டியில்  நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் சுற்றில் சாய்னா வெற்றி பெற்றுள்ளார். சக இந்திய நட்சத்திரங்கள் சிந்து, பிரணாய் ஆகியோரும் முன்னேறி உள்ளனர். சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் சுற்று ஆட்டங்கள் நேற்றும் தொடர்ந்தன. இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பெல்ஜியம் வீராங்கனை லியானே  டன் உடன் மோதினார். அதில் சிந்து 29 நிமிடங்களில்  21-15, 21-11 என்ற நேர் செட்களில்  வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 31 நிமிடங்களில் 21-16, 21-11 என நேர் செட்களில்   தாய்லாந்தின் பூஸ்னன் ஆங்பம்ருங்பனை  வீழ்த்தினார். முன்னாள் நம்பர் 1 வீராங்கனை சாய்னா நெஹ்வால் பல போட்டிகளுக்கு பிறகு முதல் சுற்றில் வென்று அசத்தியுள்ளார். சக இந்திய வீராங்கனை  மாளவிகா பன்சூட் உடன் மோதிய அவர் 34 நிமிடங்களில் 21-18, 21-14 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார்.

முன்னணி வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரதான சுற்றுக்கு தகுதி ஆட்டம் மூலம் முன்னேறி இருந்த இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மிதுன் ஒரு மணி நேரம் போராடி 21-17, 15-21, 21-18 என்ற செட்களில் கிடாம்பியை வீழ்த்தினார். இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதிய   பாருபள்ளி காஷ்யப் 14-21, 15-21 என நேர் செட்களில் தோல்வியைத் தழுவினார்.

மலேசிய மாஸ்டர்ஸ் ஓபனில்  அரையிறுதி வரை முன்னேறிய எச்.எஸ்.பிரணாய் 35 நிமிடங்களில் தாய்லாந்து வீரர் சித்திகோம் தாம்மாசினை  21-13, 21-16 என நேர் செட்களில் வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவில்  நிதின் - பூர்விஷா ராம் இணை 24 நிமிடங்களில் 21-15, 21-14 என நேர் செட்களில் இஸ்ரேலின்  மிஷா ஜில்பெர்மன் - ஸ்வெட்லானா ஜில்பெர்மன் இணையை சாய்த்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்