புழல் பகுதியில் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
2022-07-13@ 02:56:02

புழல்: புழல் பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப்பள்ளி, கண்ணப்பசாமி நகர் உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி, காந்தி பிரதான சாலையில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 3500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் புழல் பகுதியில் பெண்களுக்காக தனியாக அரசு பள்ளி இல்லாததால், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள செங்குன்றம் அரசு பள்ளிக்கும் 6 கி.மீ. தூரம் உள்ள வடகரை அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கும் பெண்கள் சென்று படித்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு பல்வேறு சிரமம் ஏற்படுகிறது. இதனால் புழல் பகுதியில் மாணவிகளுக்கு தனியாக ஒரு அரசு பள்ளி உருவாக்கவேண்டும் என்று கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்தனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வரும் கல்வியாண்டில் உரிய நடவடிக்கை எடுத்து புழல் காந்தி பிரதான சாலையில் இயங்கிவரும் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளியாக மாற்றி பெண்கள் மட்டுமே படிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கடவூர், தோகைமலை பகுதியில் நனைந்த வைக்கோல் வெயிலில் உலர்த்தும் பணி தீவிரம்-சாரல் மழையால் சம்பா அறுவடையும் பாதிப்பு
வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் குவிந்த கால்நடைகள்-₹50 லட்சம் தாண்டிய வர்த்தகம்
பாணாவரம் அடுத்த சூரை ஊராட்சியில் பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு 100 நாள் தொழிலாளர்கள் மவுன அஞ்சலி
குளித்தலை குறப்பாளையம் பிரிவு ரோட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வழிகாட்டி பெயர் பலகை
கோழி தீவன தட்டுப்பாட்டை சமாளிக்க மக்காச்சோள உற்பத்தி அதிகரிக்கப்படுமா?
உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள்-வடமாநிலத்தினர் பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!