ஸ்ரீபெரும்புதூரில் திருநங்கையை அரிவாளால் வெட்டி செயின் பறிப்பு
2022-07-11@ 00:50:27

ஸ்ரீபெரும்புதூர்:திருவள்ளூர் மாவட்டம் வயலூர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் என்கிற பாக்யா (38). திருநங்கையான இவர், ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரை அரசு மதுபான கடை எதிரே குடிசை அமைத்து வசித்து வருகிறார். இவர் கள்ள சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பாக்கியா வீட்டில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சுனில் தலைமையிலான போலீசார் பாக்கியாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பாக்கியா கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்ததும், பாக்யாவுடன் 4 வருடங்களாக வசித்து வந்த திருவள்ளூரை சேர்ந்த இளைஞர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் வேறொரு நபருடன் பாக்யா பழகி வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதில் ஏற்பட்ட தொழில் போட்டியால் பாக்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார்களா, செயின் பறிப்பின்போது அதை தடுத்த பாக்யாவை அரிவாளால் வெட்டினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
In Sriperumbudur Transgender cut and chained ஸ்ரீபெரும்புதூரில் திருநங்கை வெட்டி செயின் பறிப்புமேலும் செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல்
புளியந்தோப்பில் போதைப்பொருள் கடத்தல் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சினிமா பைனான்சியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் கைது
கொள்ளை போனதாக பொய் புகார் 3 கிலோ தங்க நகையுடன் ஊழியர்கள் பிடிபட்டனர்
ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து ரஜினி வீட்டிலும் கைவரிசை புகார் அளித்ததோ 60 சவரன்; பறிமுதலோ ரூ. 3 கோடி நகைகள்: வேலைக்கார பெண், கார் டிரைவரிடம் விடிய விடிய விசாரணை
போலி பெண் டாக்டர் கைது
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!