மீஞ்சூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
2022-07-11@ 00:49:55

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்ட ஐஎன்டியுசி கவுன்சில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மீஞ்சூரில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். தனசேகரன் முன்னிலைவகித்தார். முன்னதாக எம்.பி.தாமோதரன் அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். 3 மாதத்துக்கு ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை அனைவரும் சுற்றுலா செல்ல வேண்டும். 2022-2025ம் ஆண்டுக்குள் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சந்தானம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Tags:
At Meenjur Congress Executives Consultative Meeting Resolutions Implementation மீஞ்சூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வாசன் வலியுறுத்தல்
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
பால் உற்பத்தியாளர் கோரிக்கையை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாரதிய ஜனதா முடக்குகிறது: முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு
அதிமுகவில் நடக்கும் மியூசிக்கல் சேர் போட்டியில் ராமாயணத்தின் வாலியை போல எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்: டிடிவி.தினகரன் பேட்டி
லட்சக்கணக்கான மாணவர்களின் வேலையிழப்புக்கு ஆளுநரே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!