நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை!: கர்நாடக மாநிலம் கே.எஸ்.ஆர்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் 20,000 கனஅடி தண்ணீர் திறப்பு..!!
2022-07-09@ 16:44:26

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கே.எஸ்.ஆர். மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 20,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள முக்கிய அணைகளான கே.எஸ்.ஆர். மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்து தற்போது வினாடிக்கு தலா 10,000 கனஅடி வீதம் மொத்தமாக 20,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலையில் கே.எஸ்.ஆர். அணையில் இருந்து சுமார் 3,200 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து சுமார் 4,200 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தினாலும், அணைகள் முழு கொள்ளளவை எட்டிவரும் காரணத்தினாலும் 2 அணைகளில் இருந்தும் நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தொடர் மழையால் இந்த நீர் வெளியேற்றத்தின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 124.80 அடி உயரம் கொண்ட கே.எஸ்.ஆர். அணையில் தற்போது 122 அடி அளவுக்கு நீர்மட்டம் உள்ளது.
அணை முழு கொள்ளளவை எட்ட வெறும் 3 அடி மட்டுமே மீதம் இருக்கிறது. அணைக்கு 33 ஆயிரத்திற்கும் மேல் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது 10,000 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மறுபுறம் கடல்மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையும் தனது முழு கொள்ளளவை எட்ட மேலும் 3 அடிகள் மட்டுமே மீதம் இருக்கிறது. கபினி அணைக்கு தற்போது 14,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 10,000 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
மனிதநேய வார நிறைவு விழா ஊட்டியில் 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி-ரூ.5.62 லட்சத்தில் வழங்கப்பட்டது
ஊட்டி - குன்னூர் சாலையில் வேலிவியூ பகுதியில் கம்பி வலை தடுப்புசுவர் கட்டும் பணிகள் தீவிரம்
வலங்கைமான் பகுதியில் நெல்லுக்கு பிறகு பயறு சாகுபடி செய்ய வேளாண் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
வளர்ச்சிப் பணிக்கு நிதி ஒதுக்குவதில்லை என கூறி ஜெகதளா பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா
கவுன்சிலர் ஆதங்கம் ஊட்டி நகரில் இருந்த கால்வாய் மாயம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தர வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்-நன்கொடையாளர்களை கவுரவித்த எம்எல்ஏ
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!