திட்டக்குடி அருகே 10ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது
2022-07-07@ 18:01:09

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி அரசு பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடைய பிறந்தநாள் விழாவுக்கு சென்றுள்ளார். பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து மாணவியை மிரட்டி தங்கள் வீட்டிற்கு வரவைத்து 3 மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததை சக மாணவர்கள் வீடியோ எடுத்து சக மாணவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
தற்போது அந்த பள்ளியில் உள்ள பல்வேறு மாணவர்களும் இந்த வீடியோவை வைத்துக் கொண்டு இந்த மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து மிகுந்த மன உளைச்சல் அடைந்த மாணவி ஆவினங்குடி காவல் நிலையத்தில் தனது தாயுடன் வந்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் 3 மாணவர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் யார் யாராருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள், மாணவி வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
யானை தந்தத்துடன் வாலிபர் கைது
போதைப் பொருள் கொடுத்து அடிமையாக்கி 20 பள்ளி மாணவிகள் பலாத்காரம்: கேரளாவில் 9ம் வகுப்பு மாணவன் கைது
அம்பத்தூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.12 கோடி நிலத்தை ஆக்கிரமித்து தனியார் பில்டருக்கு விற்பனை: 3 பேர் கைது; 6 பேருக்கு வலை
பேடிஎம்மின் கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை மாற்றி பணம் மோசடி; ஊர்க்காவல் படை வீரர் கைது
முட்டுக்காடு பண்ணை வீட்டில் பயங்கரம்: மனைவியை கொன்று விட்டு கணவன் தற்கொலை முயற்சி
உடலில் சூடு வைத்த கொடூரம் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!