ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
2022-07-07@ 16:54:29

ஆவடி: ஆவடியில் நேற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
ஆவடி அருகே சேர்க்காடு பகுதியில் அமைந்துள்ள ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா பெறுவது, முதியோர் உதவி தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர்.
எனினும், கடந்த சில மாதங்களாக மக்களின் மனுக்கள்மீது வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன், பட்டா கேட்டு மனு கொடுத்த தன்னை ஒரு வருடத்துக்கும் மேலாக ஆவடி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர் என ஒரு பெண் அழுது புலம்பும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று மாலை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொதுமக்கள் அளித்த மனுக்களின் எண்ணிக்கை, எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதேபோல், வட்டாட்சியர் அலுவலகத்தின் குறைகள் குறித்தும் பொதுமக்களிடம் விசாரித்தார்.
பின்னர், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள்மீது உடனடி விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். அலட்சியப் போக்குடன் செயல்படும் அதிகாரிகள்மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வில் வட்டாட்சியர் சிவகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
வாஹன் செயலி மூலம் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எண் பலகைகளின் உண்மை தன்மை அறிய ஒரு நாள் சிறப்பு சோதனை
சேகர் ரெட்டியின் வருமான வரி கணக்கை மறு மதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம்
திருவொற்றியூர், மணலியில் ஆதரவற்றோர் விடுதியில் மேயர் பிரியா திடீர் ஆய்வு
அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றில் 69 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!