கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. 500 அபராதம்; மாநகர காவல் துறை எச்சரிக்கை
2022-07-07@ 15:44:54

சென்னை: சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நோய் பரவல் சற்று ஓய்ந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக சென்னை பெருநகர் உட்பட தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நிலையான வழிகாட்டுதல் நெறிமுறையான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், திரவ சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் ‘பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்’ எனவும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு நேற்று முதல் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
டிஎன்பிஎஸ்சி மூலம் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ரங்கசாமி கட்சியை உடைத்து புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது: நாராயணசாமி புகார்...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டம்
சென்னையில் ரூ.186.51 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!