முதல்வர் மு.க.ஸ்டாலின்; நாளை திருவண்ணாமலை பயணம்
2022-07-07@ 15:39:10

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 2 நாட்கள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை செல்கிறார். சென்னையில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை வரும் முதல்வருக்கு, மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் நாளை காலை 10 மணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, 11 மணியளவில் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் இல்லம் தேடி கல்வித்திட்ட அரசு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொள்கிறார்.
பின்னர், திருவண்ணாமலை வரும் அவருக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்களுக்கு புத்தாடைகள் வழங்குகிறார். பின்னர் திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள கலைஞரின் வெண்கல திருவுருவ சிலை மற்றும் பிரம்மாண்டமான அண்ணா நுழைவு வாயில் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
6.30 மணிக்கு அண்ணா நுழைவு வாயில் அருகே திறந்தவெளி திடலில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் பேசுகிறார். நாளை மறுநாள் காலை 9.30 மணியளவில் அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கிறார். 10 மணியளவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். முதல்வரின் வருகையை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரமே விழா கோலமாக காட்சியளிக்கிறது.
மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
வாஹன் செயலி மூலம் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எண் பலகைகளின் உண்மை தன்மை அறிய ஒரு நாள் சிறப்பு சோதனை
சேகர் ரெட்டியின் வருமான வரி கணக்கை மறு மதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம்
திருவொற்றியூர், மணலியில் ஆதரவற்றோர் விடுதியில் மேயர் பிரியா திடீர் ஆய்வு
அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றில் 69 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!