கும்பகோணம் அருகே வயல் திருவிழா திருவள்ளுவரின் உருவத்தை நடவு செய்து அசத்தல்
2022-07-07@ 15:00:02

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த மலையப்பநல்லூரில் விவசாயிகள் சார்பில் இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல்லுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வயல் திருவிழா நேற்று நடந்தது. இந்த விழாவில் உழவுக்கென்று திருக்குறளில் தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவு தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரின் உருவத்தை இயற்கை விவசாயி இளங்கோவன் நாற்றுகள் மூலம் நடவு செய்து அசத்தினார்.
நேபாளத்தில் உள்ள சின்னார் என்ற நெல் ரகம், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்தால் 50 அடி நீளம், 45 அடி அகலத்தில் திருவள்ளுவரின் உருவ அமைப்பில் நடவு செய்துள்ளார். இந்த வகை நெல் ரகங்கள் காபி கலரில் இருக்கும். இந்த விழாவில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் பங்கேற்று திருவள்ளுவர் உருவ நடவை பார்வையிட்டனர்.
இதுகுறித்து விவசாயி இளங்கோவன் கூறுகையில், இயற்கை விவசாயத்தை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். 2,000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் இயற்றிய மொத்த குறள்களில் 11 குறள்கள் இயற்கை விவசாயம் பற்றி எழுதியுள்ளார். அதன் தாக்கமாக அதே இயற்கை விவசாயத்தை நாங்களும் செய்கிறோம் என்ற சந்தோஷத்தில் உள்ளேன். திருவள்ளுவரின் உருவத்தை வயலில் நடுவதற்கு கடந்தாண்டு முதலே நினைத்து வந்தேன்.
அதை இந்தாண்டு நிறைவேற்றியுள்ளேன். இதை கடந்த 5 நாட்களாக நான் தனி ஆளாக செய்தேன். எனது அடுத்த முயற்சியாக நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை வயலில் நடவு செய்ய உள்ளேன் என்றார்.
மேலும் செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!