தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்: பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு
2022-07-06@ 00:54:48

நெல்லை: பாஜ சார்பில் நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறினார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில் ‘‘ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமானது நிர்வாக வசதிக்காக தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது போல் மாநில அரசின் நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை ஆந்திரா போன்று இரண்டாகப் பிரிக்க வேண்டும்.
இதனால் ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசு அதிக அளவில் நிதி பெற முடியும். தலா 117 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு இரண்டு மாநிலங்கள் உருவாக்கலாம். நிர்வாக வசதிக்காக பாண்டிய நாடு, பல்லவ நாடு எனப் பிரிக்கலாம். தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் நாங்கள் அதற்கான இடத்தில் இருக்கிறோம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது’’ என்றார்.
மேலும் செய்திகள்
ஆட்சி மன்ற குழு வேட்பாளரை முடிவு செய்யும்: இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும்.! செங்கோட்டையன் பேட்டி
இணையதள பக்கம் ‘ஹேக்’ காவல் ஆணையரிடம் மக்கள் நீதி மய்யம் புகார்
தமிழ்நாட்டில் மதுவிலக்கு தேவை அன்புமணி வலியுறுத்தல்
மோடிக்கு எதிரான ஆவண படம் திரையிட்ட மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன் கண்டனம்
மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நிற்கக்கோரி நாளை ரயில் மறியல்: வைகோ அறிவிப்பு
வேட்பாளரும் இல்ல, சின்னமும் இல்ல என்னத்த சொல்லி ஓட்டு கேக்க? எடப்பாடி அணி புலம்பல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!