SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியால 2 பெரிய அக்யூஸ்ட் இருக்காங்க ஒன்று பிரதமர் மோடி இன்னொன்று அமித்ஷா: பாஜ ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி பரபரப்பு பேச்சு

2022-07-06@ 00:32:19

சென்னை: இந்தியாவில் இரண்டே, இரண்டு பெரிய அக்யூஸ்ட் இருக்காங்க. ஒன்று மோடி, இன்னொன்று அமித்ஷா என்று பாஜ ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜ சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசியதாவது:
நம்ம குடும்பத்துக்கு ஆர்டராக பேசி பழக்கமே இல்லை. சகட்டு மேனிக்கு ஏதாவது பேசணும் என்றால் பேசுவோம். அதேபோல் கட்சியில் மிகப்பெரிய தொல்லை இருக்கிறது. பாரத் மாதா கி ஜெ என்றால் 3 தடவை சொல்வாங்களாம். அதுக்குள்ள பேசுறதே மறந்து போய் விடுகிறது. எனக்கு அண்ணாமலையிடம் பிடித்தது என்னவென்றால், அண்ணாமலையால் பிஜேபிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் இருக்கிறது. பிஜேபியில் எல்லாரும் சொல்வாங்க. பிஜேபிக்கு கூட்டம் வராது என்று. எவ்வளவு பெரிய கூட்டம் வந்துள்ளது.

 பாஜவினர் குவாட்டருக்கும், பிரியாணிக்கும் அலைகிறவன் கிடையாது. அது எல்லாம் அடிக்க தெரியாமல் நாங்கள் இல்லை. மு.க.ஸ்டாலின் முதல்வராக வந்தது எப்பவுமே எனக்கு சந்தோஷம் தான். அவர் நல்ல மனிதர் தான். தயவு செய்து மு.க.ஸ்டாலினை பற்றி பேசுவதை விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் ஊழல் பண்ணமாட்டார்.  

இந்தியாவில் இரண்டே இரண்டு பெரிய அக்யூஸ்ட் இருக்காங்க. ஒன்று ஐயா மோடி ஜி, இன்னொருவர் அமித்ஷா. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மவனே கருவை அறுத்து விடுவாங்க பார்த்து கொள். நீ 10 ஆயிரம் வாட்டி ஒன்றிய அரசு என்று சொன்னாலும் சரி கண்டுக்கவே மாட்டார். இது எல்லாம் சோறு போடாது ராசா. தமிழகத்தில் தெரியாமல் இருந்த பிஜேபியே அதிகமாக தெரிய வைத்தது அண்ணாமலை தான். வர்ற தேர்தலில் பிஜேபியா, திமுகவான்னு வரும். இவ்வாறு அவர் பேசினார்.


வீதியில் போவதை வேட்டியில் விடாதீங்க...
ெசன்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜ சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசியதாவது:
ஓபிஎஸ் பாஜவுக்கு வரபோறதா சொன்னாங்க. நல்லா இருக்கும் இடத்துக்கு ஏன்டா என்றேன். வீதியில் போறதை வேட்டியில் விட்டு குத்துதே குடையுதே என்றால் எப்படி. சட்டென்று நீங்க சேர்க்க  மாட்டீங்க என்று தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்