திருவள்ளூர்- தேவந்தவாக்கம் இடையே மாலையில் அரசு பஸ் இயக்கவேண்டும்; எம்பியிடம் பொதுமக்கள் மனு
2022-07-04@ 16:50:45

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தேவந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி சி.காளிதாஸ், கே.ஜெயக்குமார் எம்பியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு; திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், தேவந்தவாக்கம் மற்றும் சோமதேவன்பட்டு ஆகிய 2 கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். தேவந்தவாக்கம் கிராமத்துக்கு அரசு பேருந்து எண் டி.14 காலை நேரத்தில் மட்டும் வந்து செல்கிறது.மாலை நேரத்தில் அந்த பஸ் இயக்கப்படுவதில்லை.
இந்த கிராமங்களில் இருந்து சென்னை, பெரும்புதூர் பகுதிக்கு திருவள்ளூர் வழியாக ஏராளமானோர் தினமும் வேலைக்கும் பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனைக்கு வர வேண்டுமானால் சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று மெய்யூரில்தான் பேருந்து மூலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மாலையில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மீண்டும் மாலை வீட்டிற்கு திரும்ப பேருந்து வசதி இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
மெய்யூரில் இருந்து 3 கி.மீட்டர் தூரம் நடந்து தேவந்தவாக்கம் வரை செல்லும் பெண்களும் குழந்தைகளும் முதியோர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே திருவள்ளூரில் இருந்து தேவந்தவாக்கம் வரை டி 14 என்ற அரசு பேருந்தை மாலை நேரத்திலும் இயக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
“போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஜெயக்குமார் எம்பி உறுதி அளித்துள்ளார்.
மேலும் செய்திகள்
நெடும்பலம் அரசு விதை பண்ணையில் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மாப்பிள்ளை சம்பா நெற்கதிர் சாய்ந்தது
`ஸ்மார்ட் சிட்டி' புதிய கட்டுமான பணிக்காக பாளை. மார்க்கெட்டில் கடைகள் இடித்து அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எல்லைப் பகுதியில் வருவாய்த்துறை சோதனைச்சாவடி அமைக்கப்படுமா? தேனி மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
உலகில் முதலில் எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான்' விரகனூர் கல்லூரியில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பேச்சு
பொள்ளாச்சி வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ‘ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்’: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழங்கல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!