SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம் தகவல்

2022-07-02@ 12:48:06

திருவனந்தபுரம்; கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் மிதமாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் மெதுவாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் கேரளா முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கேரளாவில் வருகிற 5-ந் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை திருவனந்தபுரம் தவிர மாநிலத்தின் 13 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் முதல் 5-ந் தேதி வரை அதிதீவிர மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு உள்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்