SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாசே ஜெ.ராமச்சந்திரன் பிறந்தநாள்; தலைவர்கள் நேரில் வாழ்த்து

2022-07-02@ 00:22:24

சென்னை: நாசே  தொண்டு நிறுவன தலைவரும், அமெட் கடல்சார் பல்கலைக்கழக வேந்தருமான  நாசே ஜெ.ராமச்சந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு  தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
நாசே தொண்டு  நிறுவன தலைவர் நாசே ஜெ.ராமச்சந்திரன் பிறந்த நாள் விழா, சென்னை  சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் முன்னிலையில் நாசே ஜெ.ராமச்சந்திரன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிவராமன், ரங்கபாஷ்யம், ஜே.பாலமுருகன்,  ஏ.ஜி.சிதம்பரம்,  பஞ்சாட்சரம், வீரபாண்டியன், யாதவ மகாசபையின் சார்பாக  சபாபதி, எத்திராஜ், ராம்தாஸ், முரளி, பன்னீர்செல்வம், கோபி, முருகன், குணா,  ஜான்சன், செரிப், விஜயகுமார், கிஷோர், ராஜேஷ், கார்த்திக், கோபி,  வெங்கடேசன், சக்திவேல், மோகன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.  

பிறந்த  நாளை முன்னிட்டு, அக்‌ஷயா முதியோர் இல்லம் மற்றும் முகப்பேரில் உள்ள  ஆதரவற்ற சிறுவர் இல்லங்களில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் நட்சத்திர ஓட்டலில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சியில் ஆர்.எம்.கே கல்விக்குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், எம்.பி.,க்கள் திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், செல்லக்குமார், ஜெயக்குமார், எம்பி கந்தசாமி, புதுச்சேரி அமைச்சர் நெடுஞ்செழியன், பீட்டர் அல்போன்ஸ், ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, செல்வப்பெருந்தகை, நாசே ராஜேஷ், காங்கிரஸ் நிர்வாகிகள் சிவராமன், ரங்கபாஷ்யம், சிதம்பரம், பாலமுருகன், முன்னாள் அமைச்சர் ெஜயக்குமார், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட பலர் நேரில் வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்