காஞ்சி தனியார் கல்லூரி தேர்வு அறையில் மின்விசிறி திடீரென அறுந்து விழுந்ததால் மாணவி காயம்
2022-07-01@ 15:42:54

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி தேர்வு அறையில் இருந்த மின்விசிறி திடீரென அறுந்துவிழுந்ததால், மாணவி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரிய காஞ்சிபுரம் மளிகை செட்டித்தெருவை சேர்ந்தவர் தில்ஷாத். இவரது மகள் பாத்திமா. சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். கல்லூரியில் நேற்று மாணவிகள் செமஸ்டர் தேர்வு எழுதிகொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தேர்வு அறையில் உள்ள மின்விசிறி அறுந்து விழுந்தது. இதனால் பாத்திமாவின் தலையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து தேர்வு எழுதியுள்ளார். சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் கழித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர், மகளை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். ஸ்கேன் எடுத்து பரிசோதித்த டாக்டர்கள், மாணவியின் தலையில் உள்காயம் இருப்பதாக கூறியுள்ளனர்.
கல்லூரியில் மின்விசிறிகளை சரிவர பராமரிக்காதது, மின்விசிறி விழுந்து மாணவிக்கு காயம் ஏற்பட்ட பின்பும் தேர்வு எழுத அனுமதித்து, காலதாமதமாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பியது போன்ற சம்பவங்களால் கல்லூரி நிர்வாகத்தை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நெடும்பலம் அரசு விதை பண்ணையில் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மாப்பிள்ளை சம்பா நெற்கதிர் சாய்ந்தது
`ஸ்மார்ட் சிட்டி' புதிய கட்டுமான பணிக்காக பாளை. மார்க்கெட்டில் கடைகள் இடித்து அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எல்லைப் பகுதியில் வருவாய்த்துறை சோதனைச்சாவடி அமைக்கப்படுமா? தேனி மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
உலகில் முதலில் எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான்' விரகனூர் கல்லூரியில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பேச்சு
பொள்ளாச்சி வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ‘ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்’: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழங்கல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!