SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை திரைப்படமாகிறது

2022-06-30@ 03:27:06

சென்னை: பாஜ முன்னாள் தலைவரும், 3 முறை இந்திய பிரதமராக பதவி வகித்த வருமான அடல் பிஹாரி வாஜ்பாய் வாழ்க்கை இந்தியில் திரைப்படமாகிறது. ‘அடல்’ என்ற பெயரில் உருவாகும் இதை வினோத் பானுஷாலி, சந்தீப் சிங் தயாரிக்கின்றனர். ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்: பொலிட்டீஷியன் அன்ட் பேரடாக்ஸ்’ என்ற புத்தகத்தை தழுவி இப்படம் உருவாக்கப்படுகிறது. இதில் வாஜ்பாயின் இளமைக்காலம், கல்லூரி நாட்கள் மற்றும் அரசியல் பிரவேசம் குறித்து இடம்பெறுகிறது. பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் யுத்தம், அப்துல் கலாம் ஜனாதிபதியாக தேர்வு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளும் இப்படத்தில் இடம்பெறுகிறது. வரும் 2023 கிறிஸ்துமஸ் தினத்தன்று வாஜ்பாயின் 99வது பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் படத்தை வெளியிடும் வகையில் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இதில் வாஜ்பாயின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை இடம்பெறும் என்றும் தயாரிப்பாளர் வினோத் பானுஷாலி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

  • turist_world

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்