டிஎஸ்-இஓ புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது
2022-06-29@ 14:17:24

சென்னை: டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி -53 ராக்கெட்டை இஸ்ரோ நாளை விண்ணில் ஏவுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை பொருத்தி அவற்றை விண்ணில் ஏவி வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது. இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் பாய்கிறது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுன்ட் டவுன் இன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது.
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டில் 365 கிலோ எடை கொண்ட டிஎஸ்-இஓ எலக்ட்ரோ-ஆப்டிக் செயற்கைகோள் என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளும் அதனுடன் சிங்கப்பூரின் மற்றொரு செயற்கைகோளான 155 கிலோ எடை கொண்ட என்இயு-சாட் மற்றும் 2.8 கிலோ எடையுள்ள ஸ்கூப் 1 உள்பட 3 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன.
இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 16வது ராக்கெட் இதுவாகும். டிஎஸ்-இஓ செயற்கைகோள் அதிக தெளிவுதிறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது.
இது கடல்சார் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, பேரிடர் மீட்பிற்கு தேவைப்படும் மனித வளங்களை கண்டறிவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். 44.4 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது
மேலும் செய்திகள்
சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்களின் அனைத்து குடும்ப சுப நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: சென்னை மாநகராட்சி
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ககளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!