SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வணிக முத்திரையின்றி பொட்டலத்தில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்புக்கு ஜி.எஸ்.டி. விதிப்பது கவலை அளிக்கிறது: பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு..!!

2022-06-29@ 11:39:10

சென்னை: வணிக முத்திரையின்றி பொட்டலத்தில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்புக்கு ஜி.எஸ்.டி. விதிப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைத்திருப்பது கவலை அளிக்கிறது. தொழில்நுட்பமும், நாகரிகமும் அதிகரித்து விட்ட நிலையில் குக்கிராமங்களில் கூட வணிக முத்திரையற்ற உணவுப் பொருட்கள் பொட்டலத்தில் அடைக்கப்பட்டுதான் விற்கப்படுகின்றன. அவற்றுக்கு 5% வரி விதிக்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் பணவீக்கம் ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், பிற அத்தியாவசியத் தேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டால் அது பணவீக்கமும், அதன் விளைவாக விலைவாசியும் கடுமையாக அதிகரிக்கும்; மக்கள் பாதிக்கப்படுவார்கள். மக்களை பாதிக்கும் வகையிலான இந்த வரி உயர்வு பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கக் கூடாது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்