SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலையில் வெளியீடு: ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் தகவல்..!!

2022-06-29@ 10:22:45

டெல்லி: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை மாதம் 4 மற்றும் 10ம் தேதிகளில் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 12ம் வகுப்பு வாரிய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் நிலவி வந்தது. பொதுத் தேர்வை 2 பிரிவுகளாக நடத்தி நிறுத்துவதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நாடு முழுவதும் சர்ச்சைகள் எழுந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4ம் தேதி வெளியாகும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஜூலை 10ம் தேதி வெளியாகும் என்று டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்