டிஎஸ்-இஓ புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது
2022-06-29@ 00:08:58

சென்னை: டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி -53 ராக்கெட்டை இஸ்ரோ நாளை விண்ணில் ஏவுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை பொருத்தி அவற்றை விண்ணில் ஏவி வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது.
இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் பாய்கிறது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுன்ட் டவுன் இன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது. பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டில் 365 கிலோ எடை கொண்ட டிஎஸ்-இஓ எலக்ட்ரோ-ஆப்டிக் செயற்கைகோள் என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளும் அதனுடன் சிங்கப்பூரின் மற்றொரு செயற்கைகோளான 155 கிலோ எடை கொண்ட என்இயு-சாட் மற்றும் 2.8 கிலோ எடையுள்ள ஸ்கூப் 1 உள்பட 3 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன.
இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 16வது ராக்கெட் இதுவாகும். டிஎஸ்-இஓ செயற்கைகோள் அதிக தெளிவுதிறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது. இது கடல்சார் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, பேரிடர் மீட்பிற்கு தேவைப்படும் மனித வளங்களை கண்டறிவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். 44.4 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மக்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே உருக்குலைந்த 348 இ-டாய்லெட்கள்: மாநகராட்சி நிலைக்குழு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
போதையில் வாகனம் ஓட்டிய 772 பேரிடம் ரூ.80.55 லட்சம் அபராதம் வசூல்: அபராதம் செலுத்தாதவர்களின் 311 வாகனங்கள் பறிமுதல்
இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாமன்ற கூட்டம்: மேயர் பிரியா அறிவிப்பு
வியாசர்பாடி பகுதியில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மரணம்: போலீசார் விசாரணை
ஆர்.எம்.கே. மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 19ம் ஆண்டு விழா, விளையாட்டு விழா
நவீன முறையில் சீரமைக்கப்பட்ட ஸ்டான்லி மருத்துவமனை சுரங்கப்பாதை திறப்பு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!